சினிமா செய்திகள்

வலிமையான பெண்ணாக சுருதிஹாசன் + "||" + Shruti Haasan as a strong woman

வலிமையான பெண்ணாக சுருதிஹாசன்

வலிமையான பெண்ணாக சுருதிஹாசன்
தான் வலிமையான பெண்ணாக இருப்பதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசன் சிறிது இடை வெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜனநாதன் இயக்கும் லாபம் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எனக்கு தெரிந்த வரை நிறைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு காரணமாக இன்னொரு பெண்தான் இருக்கிறார். பெண்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், இணக்கமாகவும் இல்லாததால்தான் இந்த சிக்கல்கள் நடக்கின்றன. நான் எனது குழுவில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து இருக்கிற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன்.


நான் சிறிய வயதில் இருந்தே திடமான பெண்ணாக வளர்ந்தேன். என்னை வளர்த்தது ஒரு வலிமையான மனிதர். எனது அப்பாவைத்தான் சொல்கிறேன். ஆண்களை நேசிக்கும் பெண்கள் பட்டியலில் நான் இல்லை. என்னையும் சேர்த்து வீட்டில் இன்னும் 2 சக்தி வாய்ந்த பெண்கள் இருக்கிறார்கள்.

ஒன்று எனது அம்மா சரிகா, இன்னொருவர் தங்கை அக்‌ஷரா. இன்றைய காலத்தில் பெண்களை தாழ்வு படுத்தும் நிலைமை என்பது பல்வேறு வடிவங்களில் இருக்கிறது. லண்டனில் எனது இசைக்குழுவில் இருக்கும் எல்லோருமே பெண்கள்தான். பெண்கள் என்பதற்காக அந்த வேலையை அவர்களுக்கு கொடுக்கவில்லை. திறமையை பார்த்துத்தான் கொடுத்தேன்.

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து முன்னேறி போகவேண்டும்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்
நான் குடிப்பது இல்லை, நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் என நான் கூறிய பொழுது எப்படி நான் மதுவுக்கு அடிமை என செய்தி வருகிறது என நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. ஹாலிவுட்டில் சுருதிஹாசன்
ஹாலிவுட் தொடர் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளார்.