சினிமா செய்திகள்

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடிக்க பல மணிநேரம் மேக்கப் போட்ட தீபிகா படுகோனே + "||" + To acting the role, woman who suffered from a fluid infusion deepika padukone wore makeup for several hours

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடிக்க பல மணிநேரம் மேக்கப் போட்ட தீபிகா படுகோனே

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடிக்க பல மணிநேரம் மேக்கப் போட்ட தீபிகா படுகோனே
திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடிக்க பல மணிநேரம் மேக்கப் போட்டதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.

பாஜ்ரா மஸ்தானி, பத்மாவத், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை நெருங்கி வந்த தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படம் சபாக். டெல்லியில் திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த வருடம் இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். சபாக் படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு:-

“சபாக் படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் சிறந்த படமாக இருக்கும். எனது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆயிரம் கண்களுடன் காத்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல எனது கணவர் ரன்வீர் சிங்கும் இந்த அற்புதமான படத்தை பார்க்க என்னால் காத்து இருக்க முடியவில்லை என்றார்.

திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட முக தோற்றத்துக்காக மேக்கப் போட பல மணிநேரம் ஒதுக்க வேண்டி இருந்தது.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

தீபிகா படுகோனே கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து உலக கோப்பையை இந்திய அணி வென்ற சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் 83 படத்தில் நடிக்கிறார். கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...