சினிமா செய்திகள்

ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால் + "||" + 20 Days shoting Without Clothing: Shocked amala paul

ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்

ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்
ஆடை படப்பிடிப்பில் நடிகை அமலாபால் நடித்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆடை படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால் நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பதுபோல் டிரெய்லர் தொடங்குகிறது.

பிறகு போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் பரபரக்கின்றன. எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை என்கின்றனர்.

நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும் அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். சமந்தாவும் பாராட்டி இருக்கிறார். ஆடை படத்தை ரத்ன குமார் இயக்கி உள்ளார். தணிக்கை குழுவினர் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

படம் குறித்து டைரக்டர் ரத்ன குமார் கூறும்போது, “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது. அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றுவது சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன.

பைக் ஓட்டுதல் சண்டை காட்சிகள் என்று கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அமலாபால் திரையுலக வாழ்க்கையில் ஆடை முக்கிய படமாக இருக்கும்” என்றார்.