சினிமா செய்திகள்

விஜய் மில்டன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்! + "||" + Vijay Antony plays Vijay Milton Direction

விஜய் மில்டன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்!

விஜய் மில்டன் டைரக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்!
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை விஜய் மில்டன் டைரக்டு செய்கிறார்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த ‘கொலைகாரன்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தயாரித்த பட நிறுவனங்கள் இணைந்து அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. படத்துக்கு இன்னும் பெயர்  சூட்டப்படவில்லை. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன், திரைக்கதை அமைத்து டைரக்டு செய்வதுடன், ஒளிப்பதிவும் செய்கிறார்.

விஜய் ஆண்டனி-விஜய் மில்டன் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரியும் இந்த படத்தை லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப்குமார், கமல் போரா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் விஜய் மில்டன் கூறியதாவது:-

‘‘இது முழுக்க முழுக்க அதிரடியான படம். படத்தில், விஜய் ஆண்டனி யார்? என்பது ‘சஸ்பென்ஸ்’ ஆக இருக்கும். கூட்டு தயாரிப்பில் படம் உருவாகிறது. அந்தமான், கோவா, டையூ, டாமன் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஒரு நம்பகமான மற்றும் தரமான படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.''