சினிமா செய்திகள்

அஜித் பட நடிகை 2-வது திருமணம் + "||" + Ajith is an actress Married 2nd

அஜித் பட நடிகை 2-வது திருமணம்

அஜித் பட நடிகை 2-வது திருமணம்
அஜித்குமாரின் ஆசை படத்தில் ‘ஷாக் அடிக்குது சோனா’ பாடலுக்கு நடனம் ஆடியவர் பூஜா பத்ரா.
அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது.

பூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அமெரிக்காவிலேயே தங்கி குடும்பம் நடத்தினார். 2010-ல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு இந்தியா திரும்பிவிட்டார்.


இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான நவாப் ஷாவுக்கும், பூஜா பத்ராவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பூஜா பத்ராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவாப் ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் கைது
முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னையில் 10-ந்தேதி நடக்கிறது ரஜினி மகள் சவுந்தர்யா 2-வது திருமணம் தொழில் அதிபர் மகனை மணக்கிறார்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனை 2-வது திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி சென்னையில் நடக்கிறது.