சினிமா செய்திகள்

நடிப்பு, நகை தொழில், தயாரிப்பு அதிகம் சம்பாதிக்கும் காஜல் அகர்வால் + "||" + Acting, Jewelery Industry, Product Earning much Kajal Agarwal

நடிப்பு, நகை தொழில், தயாரிப்பு அதிகம் சம்பாதிக்கும் காஜல் அகர்வால்

நடிப்பு, நகை தொழில், தயாரிப்பு அதிகம் சம்பாதிக்கும் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 50 படங்கள் நடித்துவிட்டார்.
கதாநாயகியாக மட்டுமின்றி வேறு தொழில்கள் மூலமும் சம்பாதிக்கிறார். தங்கை நிஷாவுடன் சேர்ந்து நகை வியாபாரம் செய்கிறார். பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பிலும் இறங்கி உள்ளார்.

தெலுங்கில் காஜல் அகர்வால் குருவாக கருதுபவர் தேஜா. அவர் இயக்கத்தில்தான் முதன் முதலில் 2007-ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு அவர் இயக்கத்தில் நடித்த ‘நீனே ராஜூ நீனே மந்திரி’ படம் வெற்றி அடைந்தது. கடந்த மாதம் வந்த சீதா படத்திலும் 3-வது முறையாக அவரது இயக்கத்தில் நடித்தார்.


இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவும் தயாராகி உள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஜனதா காரேஜ் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆடிய நடனம் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் விசில் அடித்து ரசித்தனர். அடுத்து திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் சிறந்த டான்சர் அவருக்கு இணையாக ஆடக் கூடியவர் என்று காஜலை தேர்வு செய்துள்ளனர். சினிமா வாய்ப்பு இருக்கும்போதே ஒரு பாடலுக்கு ஆடுவது, படங்கள் தயாரிப்பது, வியாபாரம் செய்வது என்று சம்பாதிப்பதில் உஷாராக இருக்கிறார் காஜல் அகர்வால்.