சினிமா செய்திகள்

கொலையுதிர் காலம் இந்தி பதிப்பு தோல்வி நயன்தாரா படக்குழு அதிர்ச்சி + "||" + Kolaiyuthir kaalam The Hindi film version failed The Nayantara Boat Shock

கொலையுதிர் காலம் இந்தி பதிப்பு தோல்வி நயன்தாரா படக்குழு அதிர்ச்சி

கொலையுதிர் காலம் இந்தி பதிப்பு தோல்வி நயன்தாரா படக்குழு அதிர்ச்சி
‘கொலையுதிர் காலம்’ நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர்.
நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே திரைக்கு வந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. ஐரா பட வசூலும் திருப்தியாக இல்லை. இதனால் அடுத்து திரைக்கு வரும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை பெரிதாக நம்பி இருந்தார். இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர்.


இந்த படத்தை முதல் தடவையாக யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். இந்த படத்தின் விழாவில்தான் நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி அவரை கட்சியை விட்டு நீக்கும் நிலைமை ஏற்பட்டது. கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிக்க காமோஷி என்ற பெயரில் தயாரானது.

2 படங்களையுமே சக்ரி டோலட்டி இயக்கி இருந்தார். கொலையுதிர் காலம் காமோஷி படங்களை கடந்த 14-ந் தேதி திரைக்கு கொண்டுவருவதாக அறிவித்து விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் கொலையுதிர் காலம் தலைப்பு பிரச்சினையில் சிக்கியதால் அன்று வெளியாகவில்லை. அதே தேதியில் இந்தி பதிப்பான காமோஷி திரைக்கு வந்துவிட்டது.

ஆனால் காமோஷி ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்துவிட்டது. இது கொலையுதிர் காலம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவும் வருத்தத்தில் இருக்கிறார். காமோஷி படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற தமன்னாவின் கனவும் தகர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...