சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் சுருதிஹாசன் + "||" + Surudihasan in Hollywood

ஹாலிவுட்டில் சுருதிஹாசன்

ஹாலிவுட்டில் சுருதிஹாசன்
ஹாலிவுட் தொடர் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளார்.

தமிழில் 7-ம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சி-3 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சுருதிஹாசன். தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.


இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார். வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். பாடல் ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க டி.வி.யில் வெளியாகி வரும் டிரெட்ஸ்டோன் என்ற தொடரில் நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த தொடர் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. டிரெட்ஸ்டோன்னில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

இந்த தொடரில் சுருதிஹாசன் நீரா படெல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஓட்டலில் வேலைபார்த்துக்கொண்டு மறைமுகமாக கொலையாளியாகவும் உலவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரில் ஜெரிமி ஐர்வின், பிரயன் சுமித் ஓமார் மெட்வாலி ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே பிரியங்கா சோப்ரா அமெரிக்க டி.வி. தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்
நான் குடிப்பது இல்லை, நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன் என நான் கூறிய பொழுது எப்படி நான் மதுவுக்கு அடிமை என செய்தி வருகிறது என நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. வலிமையான பெண்ணாக சுருதிஹாசன்
தான் வலிமையான பெண்ணாக இருப்பதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.