சினிமா செய்திகள்

தியேட்டர்களில் விஜய் சேதுபதி படம் நிறுத்தம் + "||" + Vijay Sethupathi movie stop in theaters

தியேட்டர்களில் விஜய் சேதுபதி படம் நிறுத்தம்

தியேட்டர்களில் விஜய் சேதுபதி படம் நிறுத்தம்
தியேட்டர்களில் நடிகர் விஜய் சேதுபதியின் படம் நிறுத்தப்பட்டது.

விஜய்சேதுபதி-அஞ்சலி நடித்த சிந்துபாத், தனுசின் பக்கிரி மற்றும் தும்பா ஆகிய படங்கள் நேற்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த படங்களுக்கான டிக்கெட் முன்பதிவும் நடந்தன. ஆனால் சிந்துபாத் படம் திடீரென்று நிறுத்தப்பட்டது. படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். சிந்துபாத் படத்தை திரையிட தெலுங்கானா உயர்நீதி மன்றம் தடைவிதித்தால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இந்த படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வான்சன் மூவீஸ் இணைந்து தயாரித்தன. பாகுபலி-2 படத்தின் தமிழ் உரிமையை அதன் தயாரிப்பாளரான ஆர்கா நிறுவனத்திடம் இருந்து கே புரொடக்‌ஷன்ஸ் வாங்கி இருந்தது.


இந்த படத்துக்கு தரவேண்டிய தொகையில் சில கோடிகளை கே புரொடக்‌ஷன்ஸ் தரவில்லை என்று ஆர்கா நிறுவனம் தெலுங்கானா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிந்துபாத் படத்தை திரையிட தடை விதித்தார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தடை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் மேல் முறையீட்டு வழக்கில் தடைவிதித்தது செல்லும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிந்துபாத் படம் நேற்று திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை.