சினிமா செய்திகள்

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் + "||" + Vijay-Ajith-Surya fans on Twitter

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.
சென்னை,

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் முதல் போஸ்டர்  நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்கள் படத்தில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக முதல் போஸ்டர்  இருந்தது. படத்திற்கு 'பிகில்' என பெயரிடப்பட்டு உள்ளது.

'பிகில்' படத்தின் இரண்டாவது போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. காவி வேட்டியுடன், கையில் ஆயுதமும் கழுத்தில் சிலுவையும் இருக்கும் வகையில் தந்தையின் கேரக்டர் இருக்க, பின்னணியில் மூன்று விஜய், வித்தியாசமான லுக்-களில் இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டது.

படத்தின் இரண்டு போஸ்டர்களுமே ரசிகர்களுக்கு விருந்து தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்விட்டரிலும் #BIGIL என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் தற்போது வரை இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

'பிகில்' போஸ்டர் வெளியானதை தொடர்ந்து விஜய்-ன் ரசிகர்கள் பலரும் அந்த போஸ்டரையே தங்களின் புரோபைலாக வைத்திருப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. கடந்த 3 நாட்களாக விஜய்-ன் பிறந்த நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஐந்து ஹேஷ்டேக்குகளை (#happybirthdayTHALAPATHY #Happybirthdayeminentvijay #Happyyyybirthdaythalaivaaaaaa #HBDEmientVijay)  உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டாப்பில் உள்ளது. விஜய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு கவிதைகள் மூலமாகவும் வித்தியாசமான போட்டோக்கள் மூலமாகவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு போட்டியாக நடிகர்கள் அஜித் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் ஹேஷ்டேக்குகளை  உருவாக்கி போட்டிப்போட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது; அதிர்ஷ்டமும் தேவை - டி.ராஜேந்தர்
அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என, நடிகர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.
2. அஜித்தின் 'வலிமை' பட சண்டை காட்சிகளுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம்?
அஜித்தின் 'வலிமை' படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டை காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? நடிகை ஸ்ரீப்ரியா
ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? என்பது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கூறி உள்ளார்.
4. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன்
தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் என கமல்ஹாசன் கூறினார்.
5. மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
மூத்த மலையாள நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.