சினிமா செய்திகள்

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர் + "||" + today evening Meet the Chief Minister We have asked for time The actor is Nazer

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்
இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.
சென்னை

23ஆம் தேதி நடைபெற இருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அண்மையில் உத்தரவிட்டிருந்தார் தென்சென்னை மாவட்ட பதிவாளர். ஆனால், இதை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்தது. இதை தொடர்ந்து  தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை ஐகோர்ட். 

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினர்.

பின்னர்  நாசர் பேட்டி அளித்தார். அப்போது,  நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். நடிகர் சங்கம் பற்றி முழுமையாக, அனைத்தையும் துணை முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என கூறினார்.

பின்னர் சென்னையில் நடிகர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனுடன், பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் நாசர் சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
2. லீக்கான விஜய்யின் 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
3. 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்
ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு என நடிகை அமலாபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் - போனி கபூர் பாய்ச்சல்
நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என போனி கபூர் கூறி உள்ளார்.
5. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் - நடிகை விஜயலட்சுமி கதறல்
நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.