சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம் + "||" + Actor S.V. Sekar changed the place of play

நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம்

நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம்
நடிகர் சங்க தேர்தலுக்கு போட்டியாக நடத்த இருந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23ந்தேதி நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டது.  ஆனால், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23ந்தேதி தனது 'அல்வா' நாடகத்தை நடத்த எஸ்.வி.சேகர் அனுமதி பெற்றுள்ளார்.

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி பெற்ற ரசீதை விஷால் காட்ட வேண்டும். நாடகம் நடத்துவதற்கு நான் முறைப்படி அனுமதி பெற்றுள்ளேன் என எஸ்.வி.சேகர் கூறினார்.  இதனால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.  இந்நிலையில், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெற நீதிபதி அனுமதி அளித்து அதன்படி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று தனது நாடகத்தின் பெயரை ‘காமெடி தர்பார்’ என நடிகர் எஸ்.வி. சேகர் மாற்றியுள்ளார்.  இந்த நாடகம் சென்னையில் உள்ள தியாகராஜர் அரங்கில் நடைபெற உள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவரிடம், ஏன் நாடக தலைப்பை மாற்றினீர்கள்? என கேட்கப்பட்டதற்கு, நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன் என கூறினார்.  இதேபோன்று ஏன் இடத்தை மாற்றினீர்கள்? என்ற கேள்விக்கு, நீதிமன்றத்திற்கு சென்று நாடகம் இடமாற்றம் பற்றி முடிவு செய்யவில்லை.  அவர்கள் தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்றினார்கள்.  அதனால் நாடகம் நடைபெறும் இடத்தை நானும் மாற்றினேன் என கூறியுள்ளார்.