சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்- குருவியார் + "||" + Cinema question and Answer-Kuruviyar

சினிமா கேள்வி பதில்- குருவியார்

சினிமா கேள்வி பதில்- குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, கார்த்தி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? இப்போது அவர் நடிப்பது எத்தனையாவது படம்? (பி.விக்னேஷ் வினாயகம், சென்னை-106)
கார்த்தி இதுவரை 18 படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் நடித்துக் கொண்டிருப்பது, 19-வது படம்!

***

குருவியாரே, டாப்சிக்கும், எமிஜாக்சனுக்கும் ஓட்டப்பந்தயம் வைத்தால், வெற்றி யாருக்கு? (பெ.கி.சுதர்சன், கோவில்பட்டி)
இப்போது ஓட்டப்பந்தயத்தை நடத்தினால் டாப்சிதான் வெற்றி பெறுவார். (எமிஜாக்சன் கர்ப்பமாக இருப்பதால்..!)

***

எஸ்.பி.முத்துராமன், கே.எஸ். ரவிகுமார் ஆகிய இரண்டு பேரை அடுத்து, ‘தயாரிப்பாளரின் டைரக்டர்’ ஆக இருந்து தயாரிப்பு செலவுகள் குறைய காரணமாக இருப்பவர் யார்? (டி.தாமஸ், கடலூர்)
ஒருவர், இருவர் அல்ல. இப்போது டைரக்டராக அறிமுகமாகும் பெரும்பாலான இளம் டைரக்டர்கள், ‘தயாரிப்பாளரின் டைரக்டர்கள்’ ஆகவே இருக்கிறார்கள்!

***

குருவியாரே, பேய் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு நடிக்கும் கதாநாயகிகள் யார்-யார்? (கே.சுப்பிரமணியம், திருப்போரூர்)
பேய் படங்களில் விரும்பி நடிப்பவர், நயன்தாரா! மற்ற கதாநாயகிகளுக்கு பேய் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் இல்லை!

***

சிவகார்த்திகேயனுக்கு எத்தனை குழந்தைகள்? (எம்.ராசிக், ஈரோடு)
சிவகார்த்திகேயனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கிறாள்!

***

குருவியாரே, தற்போது தமிழ் படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களில், அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (என்.ஜெயசீலன், காரைக்குடி)
சந்தேகமே இல்லாமல், வடிவேல்தான்!

***

அழகான இளம் கதாநாயகியான ஆஷ்னா சவேரி முன்னணி கதாநாயகியாக முடியாதது ஏன்? (ரா.கார்த்திக், பண்ருட்டி)
முன்னணி கதாநாயகர்களின் கருணைப் பார்வை ஆஷ்னா சவேரி பக்கம் திரும் பாததுதான் காரணம்!

***

குருவியாரே, திரிஷாவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அவர் அடிக்கடி போகும் கோவில் எது? (பி.சி.தங்கராஜ், பெரியகுளம்)
திரிஷாவுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளுக்குள் இருக்கிறதாம். அதை அவர் வெளியில் காட்டுவதில்லை. எந்த கோவிலுக்கும் அவர் விரும்பி செல்வதில்லை!

***

நகைச்சுவை நடிகர் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறாரே...அது ஏன்? (ஆர்.ஜான்சன், விளாத்திகுளம்)
‘வெண்ணிற ஆடை’ மூர்த்தியின் மகன் வெளிநாட்டில் இருக்கிறார். மகனைப் பார்க்க வெ.ஆ.மூர்த்தி அடிக்கடி வெளிநாடு பயணம் ஆகிறார். (பாசமுள்ள தந்தை!)

***

குருவியாரே, முன்பு கதாநாயகனாக இருந்து இப்போது குணச்சித்ர நடிகராக மாறிய ராஜேஷ் நடித்த முதல் படம் எது, அதில் அவருக்கு ஜோடி யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)
ராஜேஷ் நடித்த முதல் படம், ‘கன்னிப்பருவத்திலே!’ அந்த படத்தில் அவருக்கு ஜோடி, வடிவுக்கரசி!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் முன்பெல்லாம் படம் 100 நாட்களை தாண்டி ஓடினால்தான் வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது மூன்றாவது நாளே வெற்றி விழா கொண்டாடுகிறார்களே...அது சரிதானா? (ஜி.ஜானகிராமன், அருப்புக்கோட்டை)
முன்பு ஐந்து அல்லது ஆறு தியேட்டர்களில் புது படம் ‘ரிலீஸ்’ ஆகி, 100-வது நாளில் வெற்றி விழா கொண்டாடினார்கள். இப்போது 100 தியேட்டர்களில் புது படம் திரையிடப்பட்டு, மூன்றாவது நாளில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்! (முன்பு 100 நாட்கள் ஓடி எடுத்த வசூலை இப்போது மூன்றே நாட்களில் எடுத்து விடுகிறார்கள். வெற்றி விழா பின்னணி இதுதான்!)