சினிமா செய்திகள்

தீவிரவாதியாக சாய் பல்லவி! + "||" + Sai Pallavi acting as a terrorist!

தீவிரவாதியாக சாய் பல்லவி!

தீவிரவாதியாக சாய் பல்லவி!
சாய் பல்லவி ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிறந்த கதையம்சத்துக்கும், அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தற்போது அவர் 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படத்தில், ராணாவுக்கு ஜோடியாக நடிக் கிறார். இந்த படத்துக்கு, ‘விரட்ட பர்வம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அரசியலை மைய கருவாக கொண்ட படம், இது. அதில் ஏழை விவசாயியின் மகளாக-தீவிரவாதி வேடத்தில், சாய்பல்லவி நடிக்கிறார்.

இவர் நடிக்கும் இன்னொரு படத்தை சேகர் இயக்குகிறார். இவர், ‘பிடா’ என்ற வெற்றி படத்தை கொடுத்தவர். இதில், கதாநாயகனாக நாக சைதன்யா நடிக் கிறார். சேகரின் ‘பிடா’ படத்திலும் சாய் பல்லவிதான் கதாநாயகி. அந்த படம், ஆந்திராவில் இவருக்கு அதிக ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது!