சினிமா செய்திகள்

அண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்! + "||" + Sivakarthikeyan-Aishwarya Rajesh in brother-sister role!

அண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்!

அண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிவகார்த்திகேயன் இப்போது பாண்டிராஜ் டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்து வருகிறார்கள்.
இருவரும் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பாசமிகுதியால் நெகிழ்ந்து போகிற அளவுக்கு படமாக்கப்பட்டு இருக்கிறதாம்.

படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நட்ராஜ் நடித்து வருகிறார். இவர், ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நடித்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கேட்டதும்-உடனே நடிக்க சம்மதித்தாராம்.

அண்ணன்-தங்கை பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படம் தயாராகி வருகிறதாம். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்!