சினிமா செய்திகள்

காதலில் சிக்கிய காஜல் அகர்வால்! + "||" + Kajal Agarwal falls in love!

காதலில் சிக்கிய காஜல் அகர்வால்!

காதலில் சிக்கிய காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இதனால், அவர் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகி ஆகிவிட்டார். ‘‘நல்ல நிறமும், பளிச் தோற்றமும் கொண்ட உங்களிடம் நிறைய பேர் காதலை சொல்லியிருப்பார்களே.. அவர்களில் யாரையாவது நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா? “என்று கேட்கப்பட்டது.

அதற்கு காஜல் அகர்வால் அளித்த பதில் வருமாறு:-
‘‘நான் ஒரே ஒருவருடன் காதல்வசப்பட்டு இருக்கிறேன். அப்போது நான் சினிமாவுக்கு வந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு காதல் வந்தது. என் காதலர் சினிமா துறையை சேர்ந்தவர் அல்ல. பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், என்னால் காதலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. காதலரை அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த என் காதலர், ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து விட்டார். என் மீது அவருக்கு வெறுப்பு வந்து விட்டது. என்னுடனான காதலை முறித்துக் கொண்டார். இது, எனக்கு வருத்தமாக இருந்தது. சில நாட்கள் கஷ்டமாக இருந்தது. அப்புறம் பழைய நிலைக்கு திரும்பி விட்டேன்!’’

தொடர்புடைய செய்திகள்

1. “விரைவில் திருமணம்” -காஜல் அகர்வால்
விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2. “திருமணத்தில் நம்பிக்கை உள்ளது” - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.
3. விலங்குகளை நேசிக்கும் காஜல் அகர்வால்
கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
4. வெப் தொடருக்கு மாறிய காஜல் அகர்வால்
நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடிக்கின்றனர்.
5. “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.