சினிமா செய்திகள்

பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகர்; ரூ.200 அபராதம் + "||" + Telugu actor fined Rs 200 for"smoking" in public place

பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகர்; ரூ.200 அபராதம்

பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகர்; ரூ.200 அபராதம்
பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் இந்த வருட தொடக்கத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (சி.ஓ.பி.டி.ஏ.), 2003ன் படி தடை விதிக்கப்பட்டது.  இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும்.

தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ராம் பொத்தினேனி.  இவர் ஐஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.  இதற்கான படப்பிடிப்பு வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே நடந்தது.  படப்பிடிப்பின் இடைவெளியில் ராம் புகைப்பிடித்து உள்ளார்.

இதனை அறிந்த போலீசார் பொது இடத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என கூறி அந்த இடத்திலேயே அவருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.  இதற்கான ரசீதும் வழங்கினர்.  பின்பு அந்த தொகையை படத்தயாரிப்பு மேலாளர் செலுத்தி விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்திருட்டில் ஈடுபட்ட ஆலை உரிமையாளருக்கு 2 ஆண்டு கடுங்காவல் ; ரூ.1¼ கோடி அபராதம்
மின்திருட்டில் ஈடுபட்ட பிளாஸ்டிக் ஆலை உரிமையாளருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1¼ கோடி அபராதமும் விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
2. செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்: குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.500 அபராதம்
பெங்களூருவில் வசிக்கும் பொதுமக்கள் துப்புரவு தொழிலாளர்களிடம் உலர், உலரா குப்பைகள் என்று தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும். இதை மீறும் பொதுமக்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
3. கிரிக்கெட் போட்டியில் விதிமீறல்; விராட் கோலிக்கு 25% அபராதம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.
4. மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு அபராதம்
மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் டிரைவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
5. ரெயில்வே இணையதளத்தில் போலிகணக்கு தொடங்கி டிக்கெட் முறைகேடு; 2 பேருக்கு அபராதம்
ரெயில்வே இணைய தளத்தில் போலி கணக்கு தொடங்கி தஞ்சையில் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.