சினிமா செய்திகள்

தமன்னாவின் நிறைவேறாத ஆசை + "||" + Tamanna's Unfulfilled Desire

தமன்னாவின் நிறைவேறாத ஆசை

தமன்னாவின் நிறைவேறாத ஆசை
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா பிறகு இந்திக்கு போனார். அங்கு அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதனால் மீண்டும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க தயாராகி உள்ளார்.
தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சிறுவயதில் மாதுரி தீட்சித் நடனத்தை பார்த்து அவர் மாதிரி ஆட ஆசைப்பட்டேன். அவருக்கு நிறைய ரசிகர்கள். அதுபோல் எனக்கும் ரசிகர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுவே என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது. நடனம் கற்கவும் தொடங்கினேன்.

சினிமாவில் நடனத்தை மையப்படுத்தி தயாராகும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் முழு நடன திறமையையும் அந்த படத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை.

12 ஆண்டுகளாக நடிக்கிறேன். ஆனாலும் இப்போதுதான் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த மாதிரி இருக்கிறது.

இப்படி நினைப்பதுதான் எனது வெற்றியின் ரகசியம். சிறிய வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அனுபவம் வளர வளர எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது புரிகிறது. இப்போது எனது யோசனையும் மாறி இருக்கிறது.

முன்பெல்லாம் வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்தேன். இப்போது கதைகளை தேர்வு செய்யும் விதம் மாறி இருக்கிறது. எனக்கு நானே புதுசாக தெரிகிறேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் -நடிகை தமன்னா
எனக்கு திருமணம் செய்துவைக்க, எனது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்று நடிகை தமன்னா கூறினார்.