சினிமா செய்திகள்

அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் + "||" + The director expressed regret to Amala paul

அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்

அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்
டுவிட்டரில் அமலாபாலிடம் டைரக்டர் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன.

இந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் அமலாபாலின் அம்மா பேசும் செல்போன் நம்பர் டிரெய்லரில் இருந்தது.

அந்த நம்பருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து நீங்கள் அமலாபால் அம்மாவா? அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா? என்று பேசி வருகிறார்கள். அந்த நம்பர் உதவி இயக்குனருடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை கேலி செய்வதுபோல் வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர். இந்த மீம்ஸ்கள் வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்காக டுவிட்டரில் அமலாபாலிடம் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விஷயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில் வெளியிடுகிறார்கள். அதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல. ஆடை படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகிறது” என்றார்.