சினிமா செய்திகள்

பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம் + "||" + Telugu actor Ram Pothineni booked for public smoking near Charminar during film shoot

பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்

பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்
பொது இடத்தில் புகை பிடித்ததாக தெலுங்கு நடிகர் ராம் போதினேனிக்கு ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற புதிய படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. நேற்று படப்பிடிப்புக்கு வந்த நடிகர் ராம் போதினேனி, இடைவேளை நேரத்தில் புகை பிடித்ததாகக் கூறப்படுகிறது. பொது இடத்தில் நடிகர் புகைபிடிப்பதைக் கவனித்த போலீசார், அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து ரசீதை வழங்கினர்.

பொது இடத்தில் புகைபிடிப்பது, சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் 2003ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக ராம் போதினேனிக்கு போலீசார் அறிவுரை கூறினர். 

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது; அதிர்ஷ்டமும் தேவை - டி.ராஜேந்தர்
அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என, நடிகர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.
2. அஜித்தின் 'வலிமை' பட சண்டை காட்சிகளுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம்?
அஜித்தின் 'வலிமை' படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டை காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? நடிகை ஸ்ரீப்ரியா
ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? என்பது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கூறி உள்ளார்.
4. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன்
தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் என கமல்ஹாசன் கூறினார்.
5. மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
மூத்த மலையாள நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.