சினிமா செய்திகள்

வெற்றி ரகசியம் சொன்ன சமந்தா + "||" + Samantha's secret to success

வெற்றி ரகசியம் சொன்ன சமந்தா

வெற்றி ரகசியம் சொன்ன சமந்தா
நடிகை சமந்தா தனது வெற்றி ரகசியம் குறித்து கூறியுள்ளார்.
சமந்தா நடித்து தமிழில் சூப்பர் டீலக்ஸ் படமும், தெலுங்கில் மஜிலி படமும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்து தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எல்லோரையும் போல நானும் தவறுகள் செய்து இருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு தவறில் இருந்தும் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். என்னை விட அதிகம் உழைப்பவர்களும், திறமையானவர்களும் சினிமா துறையில் இருக்கிறார்கள்.

ஆனால் கதாநாயகியாக எனது பயணம் வெற்றியடைந்ததற்கு காரணம் கதைகள் தேர்வுதான். கதைகளைத்தான் நான் நம்புகிறேன். கதை தேர்வில் நான் செய்த சில தவறுகளையும், அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் மறக்கவே இல்லை. அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். மற்றவர்களையும் கவனித்து அவர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

இதுதான் எனது வெற்றிக்கு காரணம். டைரக்டர்கள் என்னை அணுகி கதை சொல்லும்போதே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவேன். இந்த கதையில் நம்மால் நடிக்க முடியுமா? கதாபாத்திரத்தில் ஒன்ற முடியுமா? இந்த படத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இந்த கதாபாத்திரத்துக்கு நான் ஏற்றவள்தானா? என்றெல்லாம் யோசித்துத்தான் தேர்வு செய்கிறேன். அதுதான் எனது வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.”

இவ்வாறு சமந்தா கூறினார்.