விரைவில் திரைக்கு வரும் ‘ஸ்பைடர் மேன்’


விரைவில் திரைக்கு வரும் ‘ஸ்பைடர் மேன்’
x
தினத்தந்தி 26 Jun 2019 10:30 PM GMT (Updated: 26 Jun 2019 8:02 PM GMT)

சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் சாதனை நிகழ்த்துகின்றன.

இந்த ஆண்டில் கேப்டன் மார்வல், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஆகிய சூப்பர் ஹீரோ படங்கள் வந்துள்ளன. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுபோல் ஸ்பைடர்மேன் சூப்பர் ஹீரோ படத்துக்கும் வரவேற்பு உள்ளது. இந்த படங்களை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் ரசிக்கிறார்கள்.

2017-ல் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் அடுத்த பாகமாக ஸ்பைடர்மேன் பார் பிரம் ஹோம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஸ்பைடர்மேனாக டாம் ஹாலாந்த் நடித்துள்ளார். ஜேக் ஜில்லன்ஹால் வில்லனாக வருகிறார். ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார். இந்த படம் இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக ரிலீசாக உள்ளது.

ஏற்கனவே அடுத்த மாதம் ஜூலை 5-ந் தேதி இந்தியாவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படத்தின் டிரெய்லருக்கு இந்திய ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து ஒருநாள் முன்னதாக 4-ந் தேதியே வெளியிடுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவை வருகிற 30-ந் தேதி தொடங்கி விடுவோம் என்று பட நிறுவனம் அறிவித்து உள்ளது.

Next Story