சினிமா செய்திகள்

ராணாவுடன் புகைப்படம் எடுத்த சுருதிஹாசன் + "||" + sruthi Hassan photographed with Rana

ராணாவுடன் புகைப்படம் எடுத்த சுருதிஹாசன்

ராணாவுடன் புகைப்படம் எடுத்த சுருதிஹாசன்
தெலுங்கு நடிகர் ராணாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.
சூர்யாவுடன் சுருதிஹாசன் நடித்த சி.3 படம் 2017-ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் படங்களில் சுருதி நடிக்கவில்லை. லண்டன் இளைஞருடன் ஜோடியாக சுற்றினார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இசை ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கவும் சுருதி ஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரியங்கா சோப்ரா ஏற்கனவே ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார்.

தென்னிந்திய நடிகைகளில் சுருதிஹாசனுக்கு முதல் தடவையாக அமெரிக்க தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவையும், இயக்குனர் பிரகாசையும் மும்பையில் சுருதிஹாசன் சந்தித்து பேசினார். அவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் பிரகாஷ் இயக்கும் படத்தில் ராணா ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் சுருதிஹாசன் நடித்து முடித்துள்ளார்.