சினிமா செய்திகள்

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பாரா? + "||" + Mudhalvan Part 2 Vijay acting?

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பாரா?

முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பாரா?
முதல்வன் 2-ம் பாகத்தில் நடிக்க விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பாகங்கள் வந்தன. இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்கிறார். தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் எடுக்கவும் திட்டம் உள்ளது.

அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வந்தன. அர்ஜுன் நடித்து 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற முதல்வன் 2-ம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

முதல்வன் படத்தை இயக்கிய ஷங்கர் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, “ரஜினிகாந்த், கமல்ஹாசன் விரும்பினால் அவர்களை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று கூறியிருந்தார். ரஜினியும், கமலும் அரசியல் பணிகளிலும் வேறு பட வேலைகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விஜய்யுடன் தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிப்பார் என்று ஷங்கர் வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியன்-2 படம் முடிந்ததும் முதல்வன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.