சினிமா செய்திகள்

மீண்டும் நெருக்கமான புகைப்படம் வெளியானதுவிஷ்ணு விஷாலுக்கு விரைவில் திருமணம்? + "||" + Vishnu Vishal to get married soon

மீண்டும் நெருக்கமான புகைப்படம் வெளியானதுவிஷ்ணு விஷாலுக்கு விரைவில் திருமணம்?

மீண்டும் நெருக்கமான புகைப்படம் வெளியானதுவிஷ்ணு விஷாலுக்கு விரைவில் திருமணம்?
பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் 2-வது திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜகஜல கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் நடந்தது. கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி படங்களை விஷ்ணு விஷால் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இருவரும் காதலிக்கிறீர்களா? என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த விஷ்ணு விஷால், “நீண்ட நாட்களாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்குமேல் இப்போது எதுவும் கூற முடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன” என்றார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்றை ஜூவாலா கட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூவாலாவை விஷ்ணு விஷால் விரைவில் 2-வது திருமணம் செய்துகொள்வார் என்று பேச்சு கிளம்பி உள்ளது.