சினிமா செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்குஇந்தி நடிகர் கைதாவாரா? + "||" + Sexual Abuse Case Hindi actor Arrested?

பாலியல் வன்கொடுமை வழக்குஇந்தி நடிகர் கைதாவாரா?

பாலியல் வன்கொடுமை வழக்குஇந்தி நடிகர் கைதாவாரா?
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் ஆதித்ய பஞ்சோலி கைதாகலாம் என்று இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தி நடிகைகள் பலர் மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். பிரபல இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியும் இதில் சிக்கினார். இவர் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஆத்ய பஞ்சோலி மீது நடிகை ஒருவர் மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

“என்னை ஆதித்ய பஞ்சோலி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். 17 வயதில் இருந்தே இந்த தொல்லையை அனுபவித்து வந்தேன். இதுகுறித்து அவரது மனைவிடம் புகார் செய்தேன். ஆனால் அவர் பொருட்படுத்தவில்லை. என்னை ஆதித்ய பஞ்சோலி பிடியில் இருந்து மீட்கவும் முன்வரவில்லை. என்னை ஆதித்ய பஞ்சோலி அடித்து சித்ரவதையும் செய்தார். எனது தலையில் அடித்தார். இதில் ரத்தம் கொட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

புகார் குறித்து மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆதித்ய பஞ்சோலி கைதாகலாம் என்று இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆதித்ய பஞ்சோலி மீது கற்பழிப்பு மற்றும் அடித்து சித்ரவதை செய்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.