சினிமா செய்திகள்

விரைவில் திரைக்கு வரும் சூர்யா படம் + "||" + Coming soon to the screen Surya Movie

விரைவில் திரைக்கு வரும் சூர்யா படம்

விரைவில் திரைக்கு வரும் சூர்யா படம்
நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சூர்யா நடித்த என்.ஜி.கே. படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்தது. தொடர்ந்து காப்பான், சூரரை போற்று ஆகிய படங்களில் நடித்தார். இதில் காப்பான் படம் முடிந்துள்ளது. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இராணி, பிரேம், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இப்போது 3-வது தடவையாக மீண்டும் இணைந்துள்ளனர். சூர்யாவின் 37-வது படமாக இது தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் லண்டனில் தொடங்கியது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. தெலுங்கு தலைப்பை நேற்று முன்தினம் அறிவிப்பதாக இருந்தனர். அன்றைய தினம் நடிகை விஜயநிர்மலா மரணம் அடைந்ததால், இயக்குனர் ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெலுங்கு தலைப்பை நேற்று வெளியிட்டார்.

காப்பான் படத்துக்கு ‘பந்தோபஸ்த்’ என்று பெயர் வைத்துள்ளனர். படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது. இதில் சூர்யா கமாண்டோ அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி உள்ளது.