சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகும் சமந்தா + "||" + Samantha is the producer

தயாரிப்பாளராகும் சமந்தா

தயாரிப்பாளராகும் சமந்தா
நடிகை சமந்தா விரைவில் தயாரிப்பாளராக உள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் வெற்றி தோல்வியை சந்தித்து இருக்கிறேன். இப்போது தரமான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை வந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். 10 வருடங்கள் தாண்டிய பிறகும் அதுபோல் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைதான் தேர்வு செய்ய வேண்டும். சினிமாவில் கதை மிகவும் முக்கியம். மகாநதியைப்போல் ‘யூ டர்ன்’ எல்லா தரப்பு மக்களையும் சேரவில்லை. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும். நான் தற்போது நடித்து வரும் ‘ஓ பேபி’ கதை அதுமாதிரி இருக்கும். விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.


சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக வாழவேண்டும். வேலைக்கு செல்வதும், வீட்டில் இருப்பதும் அவர்கள் முடிவாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்க விரும்பும் பெண்ணை வேலைக்கு செல் என்றும், வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களை வீட்டில் இருந்து சமையல் செய் என்றும் கணவன்மார்கள் நிர்ப்பந்திக்க கூடாது.

சில கணவன்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், சமையல் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம்.” இவ்வாறு சமந்தா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவை விமர்சித்த ரசிகர்கள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டதால், நடிகை சமந்தாவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
2. நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
கதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.
3. ஆந்திராவில் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ தமிழில் வருகிறது
ராம்சரண் தேஜா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய தெலுங்கு படம், ‘ரங்கஸ்தலம்’.
4. ராதாரவியை கண்டித்த குஷ்பு, சமந்தா
நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகர் ராதாரவிக்கு நடிகைகள் குஷ்பு, சமந்தா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.