சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரும் விக்ரம் படம் + "||" + Vikram movie is coming soon to Kamal Haasan's production

கமல்ஹாசன் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரும் விக்ரம் படம்

கமல்ஹாசன் தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரும் விக்ரம் படம்
விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் சாமி-2, ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வந்தன. அதன்பிறகு கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதிரடி, திகில் படமாக தயாரானது.
அக்‌ஷரா ஹாசன், லீனா, நாசர் மகன் அபி மெஹ்தி, மீராமிதுன் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தை ராஜ் கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். விக்ரமின் முதல் தோற்றம் கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் கமல் மகள் சுருதிஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார்.

படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்தன. படத்தின் டிரெய்லர் நாளை (3-ந்தேதி) வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். கடாரம் கொண்டான் 3 வாரங்களில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வெளியாகும் அதே தேதியில் அமலாபால் நடித்துள்ள ஆடை படமும் திரைக்கு வருகிறது.

விக்ரம் அடுத்து தமிழ், இந்தியில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘மகாவீர் கர்ணா’ படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...