சினிமா செய்திகள்

தோல்வி படங்களில் நடித்தும் முதல் இடத்தில் இலியானா + "||" + Iliana in the first place is Starring in failed films

தோல்வி படங்களில் நடித்தும் முதல் இடத்தில் இலியானா

தோல்வி படங்களில் நடித்தும் முதல் இடத்தில் இலியானா
சமூக வலைத்தளத்தை தொழில் ரீதியாக பயன்படுத்துபவர்களும், ஜாலிக்காக வைத்து இருப்பவர்களும் உள்ளனர்.
சினிமாவை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருப்பதால், நடிகைகள் திரைப்படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை இவற்றில் பதிவிடுகின்றனர். இதற்காக ரசிகர்களும் அவர்களை வலைத்தளத்தில் பின்தொடர்கின்றனர்.

இதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட அனைவரையும் பின்னுக்கு தள்ளி இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இலியானா பற்றிய தகவல்களை அறியத்தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. இலியானா சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவரது மவுசு குறையவில்லை என்பதை சர்வே மூலம் அறிய முடிகிறது. இலியானா, தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்திக்கு போய் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா கூறும்போது, “நான் தோல்வி படங்களில் நடித்தும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் நான் புதிய படம் போலத்தான் பார்க்கிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா துறையில் புதிய கதாநாயகி வந்துகொண்டிருக்கும் நிலையிலும் ரசிகர்கள் என்னை புதிய கதாநாயகியாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் மேலும் திறமையை நிரூபிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.