சினிமா செய்திகள்

திருமணம் பற்றி சுருதிஹாசன் விளக்கம் + "||" + description of marriage for Shruti hassan

திருமணம் பற்றி சுருதிஹாசன் விளக்கம்

திருமணம் பற்றி சுருதிஹாசன் விளக்கம்
சுருதிஹாசன் 2009-ல் ‘லக்’ இந்தி படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் லண்டனில் வசிக்கும் இத்தாலி நடிகர் மைக்கேல் கார்சேலுடன் பழகினார்.
இந்தியாவுக்கு அவரை அழைத்து வந்து பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தினார். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்தார். சுருதிஹாசன் நடிப்பில் கடைசியாக சி.3 படம் வந்தது. இந்த நிலையில் இவர்கள் காதல் திடீரென்று முறிந்தது. “வாழ்க்கை நம் இருவரையும் எதிர் எதிர் துருவத்தில் வைத்திருப்பதால் துரதிர்ஷ்டவசமாக அவரவர் வழியே பயணிக்க வேண்டி உள்ளது” என்று மைக் கேல் டுவிட்டரில் பதிவிட்டார்.

சுருதிஹாசனும் என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தை தொடங்குகிறேன் என்று கூறினார். தற்போது சுருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் சுருதியிடம், “உங்கள் திருமணம் எப்போது? எங்களுக்கு அழைப்பு விடுத்தால் உங்கள் திருமணத்தில் கலந்துகொள்வோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன், “என்னுடைய திருமணத்துக்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு முன்பாக எனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாருங்கள். சேர்ந்து கொண்டாடுவோம்” என்று கூறியுள்ளார்.