சினிமா செய்திகள்

முன்னணி நடிகர்களை ஒதுக்கிய டாப்சி + "||" + Taapsee Pannu pushed aside the leading actors

முன்னணி நடிகர்களை ஒதுக்கிய டாப்சி

முன்னணி நடிகர்களை ஒதுக்கிய டாப்சி
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“தமிழ், தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தேன். சிறந்த நடிகையாக என்னை அடையாளப்படுத்தியதும் தென்னிந்திய பட உலகம்தான். ஆனால் எனக்குள் இருக்கிற நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தது இந்தி படங்கள். இந்தி பட உலகில் ஓய்வில்லாமல் இருந்ததால் தமிழ், தெலுங்கில் நடிக்க முடியவில்லை.

ஆண்டுக்கு ஒரு தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கொண்டு வரும்போது ஒரு பெரிய கதாநாயகன் கால்ஷீட் எங்களிடம் இருக்கிறது. நீங்கள் 2 மாதம் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள்.

ஆனால் இந்தி படங்களில் நடிக்க 6 மாதங்களுக்கு முன்பே என்னுடைய கால்ஷீட் ஒதுக்கப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் பெரிய நடிகர் கால்ஷீட் இருக்கிறது. இப்போது நீங்கள் தேதி ஒதுக்கினால் முடித்து விடலாம் என்று கேட்பார்கள். என்னால் எப்படி நடிக்க முடியும்?

இப்போது தென்னிந்திய மொழி படங்களில் நான்தான் முதன்மை கதாபாத்திரமாக இருக்கிறேன். திரைக்கதை பிடித்தால் என்னுடைய முடிவுப்படி கால்ஷீட்டை ஒதுக்கி படப்பிடிப்புக்கு செல்வதை திட்டமிட்டு கொள்கிறோம். அதனால் நடிகர்கள் கால்ஷீட்டுக்காக எனது தேதிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் இதுமாதிரி திட்டமிட்டு தமிழ், தெலுங்கில் ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க போகிறேன்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.