சினிமா செய்திகள்

நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் + "||" + actress Meera Mithun Police Sammon

நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன்

நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன்
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
சென்னை,

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுன் ஜூலை 19 ஆம் தேதி ஆஜராகும்படி சென்னை தேனாம்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ரூ. 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பின் ஆஜராவதாக மீரா மிதுன் தரப்பில் இருந்து விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.