சினிமா செய்திகள்

ராஷிகண்ணா, ராஷ்மிகா : புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்? + "||" + Rashikanna, Rashmika: 2 pairs for Vijay in new movie?

ராஷிகண்ணா, ராஷ்மிகா : புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?

ராஷிகண்ணா, ராஷ்மிகா : புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?
விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது.
விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

அட்லி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அடுத்து லோகேஷ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி உள்ளது. இது விஜய்க்கு 64-வது படமாகும். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க 2 நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அவர்களில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்கியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் 64-வது படத்தில் இவர் முதன்மை கதாநாயகியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இன்னொருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். ராஷ்மிகா, பிகில் படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பார் என்று பேசப்பட்டது. பின்னர் அவருக்கு பதிலாக நயன்தாராவை தேர்வு செய்தனர். 64-வது படத்தில் விஜய்யுடன் அவர் ஜோடி சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் வேடத்தில் விஜய்?
விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிகில் என்று பெயரிட்டு விஜய்யின் அப்பா, மகன் ஆகிய இரு வேட தோற்றங்களை வெளியிட்டனர்.
2. விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’
நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்"
நடிகர் விஜய்யின் 63-வது படத்திற்கு பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
4. விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் மோதலா?
விஜய், அஜித்குமார் படங்கள் திரைக்கு வருவதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
5. விஜய்க்கு எதிரான வார்த்தைகள் - வருத்தம் தெரிவித்த கருணாகரன்
விஜய்க்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நடிகர் கருணாகரன் வருத்தம் தெரிவித்தார்.