சினிமா செய்திகள்

நயன்தாராவின் அறம் 2-ம் பாகம் + "||" + Part 2 of Nayanthara's Aram

நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்

நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையம்சத்தில் வந்தது. இதில் நயன்தாரா கலெக்டராக வந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் நயன்தாராவே மீண்டும் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்புகின்றனர்.

ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நயன்தாராவின் கொலையுதிர் காலம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் பிகில் படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த படங்களில் நடிப்பார்.

எனவே நயன்தாராவுக்கு பதில் அறம் 2-ம் பாகத்தில் வேறு நடிகையை தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன. சமீபகாலமாக சமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் அவரை அறம்-2 படத்துக்கு தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.