சினிமா செய்திகள்

நிர்வாண காட்சியில் நடித்தது எப்படி? நடிகை அமலாபால் விளக்கம் + "||" + In the nude scene How it acting out Actress Amalapal Description

நிர்வாண காட்சியில் நடித்தது எப்படி? நடிகை அமலாபால் விளக்கம்

நிர்வாண காட்சியில் நடித்தது எப்படி? நடிகை அமலாபால் விளக்கம்
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ள ‘ஆடை’ படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னையில் நடந்த ஆடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அமலாபால் கலந்து கொண்டு பேசியதாவது:-

“ஆடை கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். எனக்கு சமீப காலமாக வந்த படங்கள் எல்லாம் பெண்கள் குறித்த பொய்யான கதைகளாகவே இருந்தன. அதனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் இயக்குனர் ரத்னகுமார் ஆடை கதையை சொன்னார். மிகவும் பிடித்தது.


இந்த கதை எந்த ஆங்கில படத்திலாவது வந்துள்ளதா என்று கேட்டேன். அவர் தனது சொந்த கதை என உறுதியாக கூறிய பின்னரே நடிக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நிர்வாண காட்சியொன்றில் துணிச்சலாக நடிக்க வேண்டும் என்றனர். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது எனக்கு படப்படப்பாக இருந்தது.

கேமராமேன் மற்றும் குழுவில் உள்ள 15 பேரை தவிர அனைவரையும் வெளியேற்றி அந்த காட்சியை படமாக்கினார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள்தான் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் எனக்கு 15 பேரும் கணவர்கள் போல தேவையான பாதுகாப்பை அளித்தனர். அவர்கள் பாதுகாப்பு அளிக்காமல் இருந்திருந்தால் அந்த காட்சியில் என்னால் நடித்திருக்கவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

டைரக் டர்கள் பார்த்திபன், ரவிக்குமார், ரத்னகுமார், மித்ரன், லோகேஷ், நடிகர் அருண்பாண்டியன், தயாரிப்பாளர் சுப்பு உள்பட பலர் பேசினார்கள்.