சினிமா செய்திகள்

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது + "||" + Kapil Dev will acting the role Ranveer Singh Appearance released

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது. ரன்வீர் சிங் அச்சுஅசல் கபில்தேவ் போன்று இருப்பதாக இந்தி பட உலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலக கோப்பையை வென்றதை யாரும் மறக்க முடியாது. அந்த வெற்றியை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை கபீர்கான் இயக்குகிறார். கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். 1983-ல் கோப்பையை வென்றதால் படத்துக்கு ‘83’ என்றே பெயர் வைத்துள்ளனர்.


இது ஒரு வகையில் கபில்தேவின் வாழ்க்கை கதையாகவும் இருக்கும். கபில்தேவாக நடிக்கும் ரன்வீர் சிங் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற பத்மாவத், கல்லிபாய், பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அவரது கபில்தேவ் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதில் ரன்வீர் சிங் அச்சுஅசல் கபில்தேவ் போன்று இருப்பதாக இந்தி பட உலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இயக்குனர் கபீர்கான் கூறும்போது, “83 படத்தின் கதையை உருவாக்கியதும் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க எனது மனதில் இருந்தவர் ரன்வீர்சிங்தான். வெயிலில் மணிக்கணக்கில் நின்று விளையாடும்போது மேக்கப் எதுவும் இருக்காது. எனவே கபில்தேவ் கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் மட்டுமே பொருத்தமாக இருப்பார். 83 படத்தில் ரன்வீர் சிங் தோற்றத்தை கபில்தேவுக்கு காட்டியதும் ரன்வீர் அசல் என்னை மாதிரி இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டார். அவரது நண்பர்களுக்கும் காட்டினார். 2020 ஏப்ரல் 10-ந் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது” என்றார்.