சினிமா செய்திகள்

ரூ.7 கோடியில் கேரவன் வாங்கிய நடிகர் + "||" + 7 crore The actor who bought the caravan

ரூ.7 கோடியில் கேரவன் வாங்கிய நடிகர்

ரூ.7 கோடியில் கேரவன் வாங்கிய நடிகர்
நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லும்போது நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
காடுகள், மலைப்பிரதேசங்கள், கிராமங்கள் என்று வசதி இல்லாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தும்போது தயாரிப்பாளர்கள் வாடகைக்கு கேரவன் எடுத்து வந்து நிறுத்துகிறார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கேரவேனுக்குள் சென்று ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.


கேரவன்களுக்காக தயாரிப்பாளர்கள் பல லட்சங்களை செலவிடுகின்றனர். இப்போது நடிகர்கள் பலர் சொந்தமாகவே கேரவன் வைத்துக் கொள்கிறார்கள். அதில் படுக்கை அறை, மேக்கப் ரூம். ஓய்வு அறை ,சாப்பாடு அறை போன்ற வசதிகள் இருக்கின்றன. இந்தி நடிகர்கள் பலர் சொந்த கேரவன் வைத்துள்ளனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் சொகுசு வசதிகளுடன் சொந்தமாக கேரவன் வாங்கினார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் ரூ. 7 கோடி செலவில் புதிய கேரவன் வாங்கி இருக்கிறார். மும்பையில் உள்ள ஒரு கம்பெனி மூலம் இதனை வடிவமைத்து இருக்கிறார். அதற்கு பால்கன் என்று பெயர் வைத்துள்ளார். புதிய கேரவன் வாங்கியது குறித்து அல்லு அர்ஜுன் கூறும்போது, “என் வாழ்க்கையில் எது வாங்கினாலும் பெரிதாகவே வாங்கி இருக்கிறேன். ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்பினால் மட்டுமே இதுபோன்ற விலை மதிப்பில்லா பொருட்களை வாங்க முடிகிறது என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருக்கிறது” என்றார்.