சினிமா செய்திகள்

பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத் + "||" + Kangana Ranaut lands in another controversy post tiff with a journalist

பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்

பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்
பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மும்பை,

தனது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.  கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜட்ஜ்மெண்டல் ஹை கியா' திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்  ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கங்கனா ரனாவத், அவரிடம் தனது 'மணிகர்னிகா' படத்திற்கு ஏன் எதிர்மறையான விமர்சனத்தை கூறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தேசியத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுத்ததால் தன்னை அந்த பத்திரிகையாளர்  'மூர்க்கத்தனமான பெண்' என குறிப்பிட்டதாகவும் கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த அந்த பத்திரிகையாளர், கங்கனா ரனாவத் தன்னை அச்சுறுத்த முயல்வதாகவும், 'மணிகர்னிகா' திரைப்படத்தை பற்றி தான் எந்த கருத்தும் கூறவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து தொடர்ந்து அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
2. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது
இந்தியாவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன 10 ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் பிகில் இடம் பெற்றுள்ளது.
3. பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் ...!
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
4. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
5. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.