சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு - சென்னை ஐகோர்ட் + "||" + In the Actors ’Association election Count the votes cast Denial of permission   Madras highcourt

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு - சென்னை ஐகோர்ட்

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு - சென்னை ஐகோர்ட்
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை கடந்த ஜூன் 23-ந்தேதி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் முடிவடைந்து வாக்குபெட்டிகள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் விஷால் சார்பாக சென்னை ஐகோர்ட்டில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை இப்போது எண்ண முடியாது என்று கூறிய ஐகோர்ட், விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.