சினிமா செய்திகள்

கண்களால் பலாத்காரம்நடிகை இஷா குப்தா புகார் + "||" + Forcible with eyes Actress Isha Gupta complains

கண்களால் பலாத்காரம்நடிகை இஷா குப்தா புகார்

கண்களால் பலாத்காரம்நடிகை இஷா குப்தா புகார்
நடிகை இஷா குப்தா ஓட்டலில் ஒருவர் கண்ணாலேயே தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
நடிகைகள் ‘மீ டூ’வில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். போலீசிலும் வழக்குகள் பதிவாகி விசாரணைகள் நடக்கிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை இஷா குப்தா ஓட்டலில் ஒருவர் கண்ணாலேயே தன்னை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து இஷா குப்தா தனது டுவிட்டர் பக்கத்தில், “டெல்லியில் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றேன். அப்போது ஒருவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். கண்களால் என்னை பலாத்காரம் செய்தார். அப்படி பார்க்காதே என்று இரண்டு, மூன்று தடவை எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை.

இதனால் என்னுடைய 2 பாதுகாவலர்கள் என்னை சுற்றி பாதுகாப்பாக நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் அந்த நபரின் மோசமான செயலை அறியமுடியும். அவரது பெயரை ரசிகர்கள் கண்டு பிடித்து சொல்லுங்கள்” என்று கூறினார்.

இஷாவை கண்களால் பலாத்காரம் செய்தவர் ஓட்டல் உரிமையாளர் ரோஹித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அவரது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா? என்று கேள்வி எழுப்பி அவரை கண்டித்துள்ளார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.