சினிமா செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சியால்வழக்கில் சிக்கிய நடிகை + "||" + By the television show The actress caught up in the case

தொலைக்காட்சி நிகழ்ச்சியால்வழக்கில் சிக்கிய நடிகை

தொலைக்காட்சி நிகழ்ச்சியால்வழக்கில் சிக்கிய நடிகை
தென்கொரிய நடிகை லீ யோல் யும் தாய்லாந்தில் தண்ணீருக்கு அடியில் இருந்து 2 அரியவகை உயிருள்ள சிப்பிகளை எடுத்தது சர்ச்சையாகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. தாய்லாந்தில் தண்ணீருக்கு அடியில் இருக்கும் சில அரிய வகை உயிரினங்களை அனுமதி இல்லாமல் பிடிப்பது குற்றமாகும். தென்கொரிய நடிகை ஒருவர் இந்த குற்றத்தை செய்து போலீசில் சிக்கி உள்ளார். அவரது பெயர் லீ யோல் யும்.

இவர் வெற்றிகரமாக ஓடிய ‘த கிங்’ மற்றும் ‘மான்ஸ்டர்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். தாய்லாந்தில் தண்ணீருக்கு அடியில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் லீ யோல் யும் கலந்துகொண்டு தண்ணீருக்கு அடியில் இருந்து 2 அரியவகை உயிருள்ள சிப்பிகளை எடுத்துக்கொண்டு மேலே வந்தார். நான் பிடித்து விட்டேன் என்று கூச்சலும் போட்டார்.

இதனை படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சி தற்போது சர்ச்சையாகி உள்ளது. அனுமதி இல்லாமல் சிப்பிகளை பிடித்து வந்ததாக நடிகை லீ யோல் யும் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்துக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும், 5 வருட சிறை தண்டனையும் கிடைக்கும் என்கின்றனர்.

நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த டி.வி. நிறுவனம் தாய்லாந்து சட்டங்கள் குறித்து தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டுள்ளது.