சினிமா செய்திகள்

நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா + "||" + Nayanthara paired with Nivinpali

நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா

நிவின்பாலி ஜோடியாக நயன்தாரா
நயன்தாரா மலையாளத்தில் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்துள்ளார்.
நயன்தாரா நடித்து இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வந்தன. இதில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. அடுத்து திரைக்கு வருவதாக இருந்த கொலையுதிர் காலம் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளது. ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் படத்திலும், விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்து வருகிறார்.

பிகில் படம் தீபாவளிக்கு வருகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. தமிழிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.

மலையாளத்தில் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை தயான் சீனிவாசன் இயக்கி உள்ளார். ஓணம் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தென்னிந்திய பட உலகில் நயன்தாரா தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

படத்துக்கு படம் சம்பளத்தையும் உயர்த்துகிறார். இப்போது ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலிலும் இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுகிறார்கள். பட வாய்ப்பு குறைந்துவிடும் என்பதற்காக திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்.