சினிமா செய்திகள்

ரூ.16 கோடியில் வீடு வாங்கினேனா? + "||" + 16 crore Did you buy the house

ரூ.16 கோடியில் வீடு வாங்கினேனா?

ரூ.16 கோடியில் வீடு வாங்கினேனா?
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிய பிளாட் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80 ஆயிரத்து 778 என்றும், இது அந்த பகுதியில் உள்ள மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறப்பட்டது.

தமன்னா வாங்கி உள்ள வீட்டில் இருந்து 500 மீட்டர் தள்ளி கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சதுர அடி விலை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை நிர்ணயித்து உள்ளனர். தமன்னா வாங்கிய வீட்டின் மொத்த அளவு 2 ஆயிரத்து 55 சதுர அடியாகும். இந்த பிளாட்டுக்காக மொத்தம் ரூ.16.60 கோடி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இரு மடங்கு விலை கொடுத்ததை பலரும் விமர்சித்து பேசினார்கள்.


இதற்கு தமன்னா விளக்கம் அளித்து கூறியதாவது:-

“நான் இரண்டு மடங்கு விலை கொடுத்து வீடு வாங்கியதாக பலரும் பேசி வருகிறார்கள். எனது இந்தி ஆசிரியரும் இவ்வளவு விலை கொடுத்து வீடு வாங்க வேண்டுமா? என்று குறுந்தகவல் அனுப்பினார். என்னை சந்திக்கிறவர்கள் எல்லோரும் வீடு குறித்தே பேசத்தொடங்கினர். நான் வீடு வாங்கியது உண்மைதான். ஆனால் அதற்கு இரண்டு மடங்கு அதிக விலை கொடுக்கவில்லை. அந்த வீட்டு வேலைகள் முடிந்த பிறகு பெற்றோர்களுடன் அங்கு குடியேறுவேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.