சினிமா செய்திகள்

புதிய அதிரடி தோற்றத்தில் கங்கனா ரணாவத் + "||" + In the New Action look Kangana Ranawat

புதிய அதிரடி தோற்றத்தில் கங்கனா ரணாவத்

புதிய அதிரடி தோற்றத்தில் கங்கனா ரணாவத்
தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் வந்த கங்கனா ரணாவத் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஒரு படத்துக்கு ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். கங்கனாவின் படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் குவிப்பதால் தயாரிப்பாளர்கள் கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து அதிர வைக்கிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த மணிகர்னிகா படத்தில் ஜான்சிராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தார். படத்தின் இயக்குனர் கிரிஷுடன் மோதல் ஏற்பட்டு பாதி படத்தை இயக்கவும் செய்தார். இந்த படமும் திரைக்கு வந்து வசூல் குவித்தது.


தற்போது தாகட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தாகட் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் எந்திர துப்பாக்கியுடன் கங்கனா ஆவேசமாக காட்சி அளிக்கிறார். இந்த தோற்றம் இணையதளத்தை கலக்கி வருகிறது.

முந்தைய படங்களில் வாள் பிடித்த கங்கனா இந்த படத்தில் துப்பாக்கியுடன் சண்டை போடுகிறார் என்கின்றனர். ஹாலிவுட் நடிகை தோற்றத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டு கிறார்கள். இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.