சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? நடிகை அனுபமா விளக்கம் + "||" + Is Anupama Parameswaran dating cricketer Jasprit Bumrah? Premam actress tells all

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? நடிகை அனுபமா விளக்கம்

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா?  நடிகை அனுபமா விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.   அனுபமாவும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பில் இருந்தே பரவி வருகிறது. 

அதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா ட்விட்டரில் பின் தொடரும் ஒரு சிலரில் அனுபமா மட்டுமே நடிகை, வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுபமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து, சிலவற்றை ரீட்வீட்டும் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது. 

ஞாயிற்றுக்கிழமை அனுபமா ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திங்கட்கிழமை பும்ரா ட்விட்டரில் பதிவு ஒன்றை போட, இவ்விரண்டை வைத்தும் சமூக வலைதளத்தில் இருவரும் காதலிப்பது போன்ற மீம்ஸ்கள் போட தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது எனக்குத் தெரியும், அதை விட  வேறு எதுவும் தெரியாது. எந்தவொரு முறையான தகவலும் இல்லாமல் ஒரு பெண்ணைப் பற்றி சமூக ஊடகங்களில் இதுபோன்ற இணைப்பு வதந்திகள் பரப்பப்படுவது தவறானது. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.

பும்ரா நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்படுவது இது முதல்முறை அல்ல. தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம் வரும் ராசி கண்ணாவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அப்போது ராசி கண்ணா, “அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை கடந்து வேறெதுவும் தெரியாது” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு - நடிகை அமலாபால்
ஒரு தோழி இன்னொரு தோழிக்கு 'லிப் லாக்' முத்தம் கொடுத்தால் என்ன தவறு என நடிகை அமலாபால் கேள்வி எழுப்பி உள்ளார்.
2. நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் - போனி கபூர் பாய்ச்சல்
நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பினார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என போனி கபூர் கூறி உள்ளார்.
3. நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் - நடிகை விஜயலட்சுமி கதறல்
நான் ஒரு தமிழ் பெண் என்பதால் இங்கு என்னை துன்புறுத்துகிறார்கள் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
4. பத்திரிகையாளர்கள் 50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் - கங்கனா ரனாவத்
50 ரூபாய், 60 ரூபாய்க்கே பைத்தியமாக அலைபவர்கள் என பத்திரிகையாளர்கள் குறித்து நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
5. பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கங்கனா ரனாவத்
பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.