சினிமா செய்திகள்

நடிக்க தெரியாது என்றவருக்கு டாப்சி பதிலடி + "||" + Topsy retaliates for someone who does not know how to act

நடிக்க தெரியாது என்றவருக்கு டாப்சி பதிலடி

நடிக்க தெரியாது என்றவருக்கு டாப்சி பதிலடி
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்த டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த நாம் சபானா, பிங்க், பட்லா உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தின. தமிழ், தெலுங்கில் சமீபத்தில் வெளியான கேம் ஓவர் படமும் வசூல் அள்ளியது.

தற்போது துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் வீராங்கனைகள் பிரகாஷ் தோமார், சந்திரோ தோமர் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘சாண்ட் கி ஆங்’ இந்தி படத்தில் டாப்சியும் பூமி பட்னேகரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக தயிர் கடைவது, பசுமாடுகளின் சாணம் எடுப்பது, பால் கறப்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற தனது போஸ்டர்களை டாப்சி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ள தகவலையும் சமூக வலைத்தளத்தில் டாப்சி பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ஒருவர் டாப்சிக்கு நடிக்கவே தெரியாது. எனவே இயக்குனர் அனுபவ் சின்ஹா வேறு நடிகையை தேர்வு செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.

அவருக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள டாப்சி, “இந்த படத்தில் நடிக்கும் நடைமுறைகள் அனைத்தும் கையெழுத்தாகி விட்டன.

எனவே படத்தில் இருந்து என்னை நீக்க முடியாது. அடுத்த முறை வேண்டுமானால் நான் நடிப்பதை தடுக்க முயற்சி செய்யுங்கள். ஆனாலும் அதிலும் நான்தான் ஜெயிப்பேன்” என்று கூறியுள்ளார்.