சினிமா செய்திகள்

விஜய்யின் புதிய படத்தில் அர்ஜுன்? + "||" + Arjun in Vijay's new movie?

விஜய்யின் புதிய படத்தில் அர்ஜுன்?

விஜய்யின் புதிய படத்தில் அர்ஜுன்?
விஜய் நடிக்கும் ‘பிகில்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது.
விஜய் நடிக்கும் ‘பிகில்’ படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியானது. ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் தயாராகி உள்ளது.

அட்லி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அடுத்து மாநகரம் படத்தை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 64-வது படமாகும். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக 2 நடிகைகள் நடிக்க உள்ளதாகவும், இதற்காக ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இயக்குனர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் விஜய்யுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்து இருந்தார். கடந்த வருடம் திரைக்கு வந்த ‘இரும்புத்திரை’ படத்தில் வில்லனாகவும் சமீபத்தில் வெளியான ‘கொலைகாரன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார்.