சினிமா செய்திகள்

விக்ரம் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ் + "||" + For the film Vikram UA certification

விக்ரம் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்

விக்ரம் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்
கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’. இதில் அக்‌ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
இவர் ஏற்கனவே அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து இருந்தார். நாசர் மகன் அபி மற்றும் பிரபல மலையாள நடிகை லீனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கி பிரபலமானவர். படத்தில் விக்ரம் உளவு துறை அதிகாரியாக வருகிறார். அக்‌ஷராஹாசன் ஒரு பிரச்சினையில் சிக்குவதும், அதில் இருந்து அவரை விக்ரம் எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் கதை. அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது.


ஹாலிவுட் படம் போன்று இதனை எடுத்து இருப்பதாகவும், விக்ரம் ஸ்டைலாக நடித்துள்ளார் என்றும் படத்தை பார்த்த கமல்ஹாசன் பாரட்டி உள்ளார். இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் தணிக்கை குழுவினர் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிக வன்முறை இருப்பதால் யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. கடாரம் கொண்டான் படத்தை அடுத்த வாரம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.