சினிமா செய்திகள்

டாக்டரை மணந்தார் டைரக்டர் விஜய் 2 - வது திருமணம் + "||" + Married the doctor Director Vijay 2nd Marriage

டாக்டரை மணந்தார் டைரக்டர் விஜய் 2 - வது திருமணம்

டாக்டரை மணந்தார் டைரக்டர் விஜய் 2 - வது திருமணம்
அஜித்குமாரின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன்.
நடிகர் உதயாவின் தம்பி. ‘பொய் சொல்லப்போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு விஜய் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அவருக்கு 2-வது திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு-அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவை மணமகளாக தேர்வு செய்து இருவருக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தினர். மணமகள் ஐஸ்வர்யா டாக்டர் ஆவார்.


விஜய்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை நடந்தது. விஜய் பட்டு வேட்டி சட்டையும், ஐஸ்வர்யா பட்டு சேலை-ஜாக்கெட்டும் அணிந்து இருந்தனர். வைதீக முறைப்படி அவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தை செல்போனில் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மணமக்களை நடிகர் ஆர்யா மனைவி சாயிஷாவுடன் வந்து நேரில் வாழ்த்தினார்.

நடிகர் பொன்வண்ணன், இயக்குனர்கள் பார்த்திபன், மோகன்ராஜா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், தனஞ்செயன், கமீலா நாசர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.